கேரளத்து மீனவர்களே எனது ராணுவம் ..முதல்வர் பினராயி விஜயன் பெருமிதம் !
Home > தமிழ் newsதென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து கேரள மாநிலத்தில் கடந்த 10 நாட்களாக மழை கொட்டித்தீர்த்தது. 14 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. மழை வெள்ளத்திலும், நிலச்சரிவிலும் சிக்கி 350-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ள நீரில் சிக்கி இருக்கும் மக்களை மீட்கும் பணியில் முப்படை வீரர்களும், தேசிய பேரிடர் மீட்புப்படையினரும், தீயணைப்பு படையினரும், போலீஸாரும் ஈடுபட்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்ட நிலையில், அவர்களுடன் சேர்ந்து பத்தினம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர் மாவட்ட கடலோரப்பகுதி மீனவர்களும் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
மீனவர்கள் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.அவர்கள் தங்களின் சொந்த படகுகள் மூலம் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.மீனவர்களின் இந்த பணி பலரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.
மீனவர்களின் சேவை குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் ஊடகங்கள் மத்தியில் பேசும் போது மீட்புப்பணியில் ஈடுபட்டுவரும் மீனவர்கள் ஒவ்வொருவரின் பணியும் மகக்தானது. ராணுவத்துக்கு இணையாகப் பணியை மேற்கொள்கிறார்கள். நம்மாநிலத்தின் ராணுவத்தினர்களாக இருக்கிறார்கள் என நெகிழ்ச்சியுடன் பேசினார்.
மீனவர்களை கேரளத்து ராணுவ வீரர்கள் என முதல்வர் கூறியது மீனவர்களை நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.