‘என்னம்மா வாசிக்கிறார்‘.. அதுவும் தனக்கு மூளை ஆபரேஷன் நடக்கும்போது!

Home > தமிழ் news
By |
‘என்னம்மா வாசிக்கிறார்‘.. அதுவும் தனக்கு மூளை ஆபரேஷன் நடக்கும்போது!

தென் ஆப்பிரிக்காவின் ஜாஸ் இசைக் கலைஞர் ஒருவர் தனக்கு மூளை ஆபரேஷன் நடந்துகொண்டிருக்கும்போது கிதார் வாசித்துக்கொண்டிருந்த வீடியோ பலரையும் ஆச்சரியப்படுத்தியதோடு, உருக்கமான இந்த வீடியோ இணையத்தில் வைரலாகவும் பரவி வருகிறது.


தென் ஆப்பிரிக்காவின் மூஸா மன்ஸ்ஜினி என்பவருக்கு மூளை ஆபரேஷன் செய்யும்போது, அவர் கிதார் வாசித்துக்கொண்டே சுயவிழிப்போடு இருக்கட்டும் என்று டாக்டர்கள் குழுவினர் தீர்மானித்தனர்.


இவ்வாறு மூளை ஆபரேஷனின் போது சுயவிழிப்போடு விரல் அசைத்து கிதார் வாசித்ததால், அவரின் மூளைக் காய்ச்சல் நோய்த் தொற்றினை முழுமையாக குணமாக்க சாத்தியப்பட்டதாக மருத்துவர்கள் கருதுகின்றனர். மேலும், மூளையின் நினைவுகள், சிறப்புத் திறன்கள், உடல் உறுப்புகளுக்கு கட்டளையிடும் இயக்கத் திறன்கள் உள்ளிட்டவைகளுக்கு எவ்வித பாதிப்புமின்றி ஆபரேஷன் செய்ய முடிவதோடு, அதே சமயம், அவற்றின் திறன்களை அதிகரிக்கச் செய்ய முடியும் என்பதால் இத்தகையை முறையை பின்பற்றியதாக அந்த மருத்துவ குழு கூறியுள்ளது.


ஆனால் இந்த ஆபரேஷன் முறை எல்லாருக்கும் பொருந்துமா என்பது கேள்விக்குறிதான். எனினும், இதேபோன்று சமீபத்தில் ஒரு பாடகருக்கும் ஆபரேஷன் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. மூஸா தற்போது தன் மூளைக் காய்ச்சலுக்கான ஆபரேஷன் வெற்றிகரமாய் முடிவடைந்த நிலையில் உடல்நலம் தேறி வருவதோடு, விரைவில் இசை மேடையை, தன் வாசிப்பினால் அலங்கரிக்கவும் காத்திருக்கிறார்.

 

அதற்காக தனக்கு நல்ல முறையில் ஆபரேஷன் செய்து பிழைக்க வைத்த மருத்துவர் பாசில் எனிகர் தலைமையிலான மருத்துவர்கள் குழுவிற்கு தனது நன்றியை சொல்லியிருக்கிறார் மூஸா.

 

VIRALVIDEOS, OPERATION, SURGERY, DOCTORS, MEDICALMIRACLE, MUSICIAN