'கோலியின் விக்கெட்டை வீழ்த்த போகிறேன்'...ஆஸ்திரேலிய அணியின் இணை கேப்டனான 7 வயது சிறுவன்!
Home > தமிழ் newsமெல்போனில் நடைபெறும் மூன்றாவது டெஸ்டில் 7 வயது சிறுவன் ஆஸ்திரேலிய அணியின் இணை கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
ஆஸ்திரேலியவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி,தற்போது டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி அபாரமான வெற்றியினை பெற்றது.இதற்கு பழிவாங்கும் விதமாக பெர்த்தில் நடந்த இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி அசத்தலான வெற்றியினை பெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் 26ம் தேதி மெல்போர்னில் நடைபெறுகிறது.இந்த டெஸ்ட் போட்டி ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தப் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் 7 வயதான ஆர்ச்சி ஸ்கில்லர் என்ற சிறுவன் 15-வது வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.லெக் ஸ்பின்னரான ஆர்ச்சியை அணியில் சேர்த்துள்ளதாக ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் அவரிடம் தெரிவித்துள்ளார்.
இந்த சிறுவன் ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டதற்கு நெகிழ்ச்சியான பின்னணி ஒன்று இருக்கிறது.ஆர்ச்சி பிறக்கும்போதே அவனது இதயத்துடிப்பு சீராக இயங்கவில்லை.இதனால் அவனுக்கு பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டது.இருப்பினும் ஆர்ச்சிக்கு எப்போது வேண்டுமானாலும் எதுவும் நடக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.கிரிக்கெட்டின் மீது அதீத காதல் கொண்ட ஆர்ச்சிக்கு ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாவதே தனது கனவு’ என தெரிவித்திருந்தான்.
இந்நிலையில் சிறுவனின் ஆசை குறித்து அறிந்த ஆஸ்திரேலிய அணி நிர்வாகம், இந்திய அணிக்கெதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் 15-வது வீரராக ஆர்ச்சியை அணியில் தேர்வு செய்துள்ளது. அதுமட்டுமின்றி, அந்த 7-வயது சிறுவனை இணை கேப்டனாகவும் ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த நெகிழ்ச்சியான தருணத்திற்கு காரணமான ஆஸ்திரேலிய அணிக்கு,கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரிடம் இருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.
Happy birthday Archie Schiller! The new Aussie squad member recently got a chance to meet his heroes with thanks @MakeAWishAust and he'll rejoin his teammates on Sunday at the MCG
— cricket.com.au (@cricketcomau) December 22, 2018
More about Archie HERE: https://t.co/ctXeVwWwOL #AUSvIND pic.twitter.com/O0C4oDIsyh