பாலத்தில் இருந்து பேருந்து கவிழ்ந்ததால் கோர விபத்து; 7 பயணிகள் பரிதாப பலி!
Home > தமிழ் news
ஒடிஸாவின் ஜகத்பூர் அருகே உள்ள கட்டாக் எனும் இடத்தில் நேற்றிரவு நிகழ்ந்துள்ள கோரமான பேருந்து விபத்து நாட்டையே உலுக்கியுள்ளது.
அங்குள்ள மெகந்தி பாலத்தின் வழியே 30 பயணிகளுடன் வந்துகொண்டிருந்த பேருந்து திடீரென கவிழ்ந்ததில் பேருந்தில் இருந்த பயணிகளுள் கிட்டத்தட்ட 7 பேர் சம்பவ இடத்திலேயே ஆங்காங்கே சிதறிப்போய் பலியாகியுள்ளனர்.
மீதமிருந்தவர்கள் பலத்த படுகாயங்களுடன் அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்து அப்பகுதிக்கு விரைந்த கமிஷ்னர் சத்யஜித் மோகன்டை உடனடி மீட்பு படையினர் கொண்டு உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டதோடு விபத்து குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.
ACCIDENT, ODISHA, KILLED, BUS, CUTTACK