இந்தந்த தேதிகளில் நடக்கவிருந்த பல்கலைக் கழக தேர்வுகள் மட்டும் தள்ளிவைப்பு!
Home > தமிழ் news
உள் தமிழகத்தில் விடாமல் பொழிந்து வரும் கனமழை காரணமாக பல இடங்களில் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறைகள் அளிக்கப்பட்டுள்ளன. திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
நவம்பர் 22 முதல் 24 வரையிலான திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத் தேர்வுகள் தேதி குறிப்பிடப் படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் நவம்பர் 26ம் தேதி முதல் ஏற்கனவே கால அட்டவணைப்படி அறிவிக்கப்பட்ட தேர்வுகள் நடைபெறும் என்றும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.