'அடுத்தடுத்து விலகும் டாப் வீரர்கள்'.. ஐபிஎல் இந்த வருஷம் 'ரொம்ப' டல்லடிக்குமோ?

Home > தமிழ் news
By |
'அடுத்தடுத்து விலகும் டாப் வீரர்கள்'.. ஐபிஎல் இந்த வருஷம் 'ரொம்ப' டல்லடிக்குமோ?

உலகக்கோப்பை போட்டியை முன்னிட்டு அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் மிகவும் முன்னதாகவே நடைபெறவுள்ளன.

 

இந்த நிலையில் சூழ்நிலைகளைக் காரணம் காட்டி முன்னணி வீரர்கள் பலரும் ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகி வருகின்றனர். அந்த வரிசையில் லேட்டஸ்டாக ஆஸ்திரேலிய வீரர்கள் ஆரோன் பிஞ்ச், கிளென் மேக்ஸ்வெல் இருவரும் ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகியுள்ளனர்.

 

மேக்ஸ்வெல் கடந்த ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் என்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காகவும், ஆரோன் பிஞ்ச் பஞ்சாப் அணிக்காகவும் விளையாடினர். பெரிய தொகைக்கு எடுக்கப்பட்ட இருவரும் இந்த ஆண்டு தங்களது அணிகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.