இந்தியளவில் 'அதிக சம்பளம்' வாங்கும் 'டாப் 5' கோலிவுட் நடிகர்கள்

Home > தமிழ் news
By |
இந்தியளவில் 'அதிக சம்பளம்' வாங்கும் 'டாப் 5' கோலிவுட் நடிகர்கள்

போர்ப்ஸ்  இந்தியா இதழ் இந்த ஆண்டு (2018) அதிகம் சம்பாதித்த இந்திய பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 100 பேர் கொண்ட இந்தப் பட்டியலில், பாலிவுட் நடிகர் சல்மான் கான் முதலிடத்தில் உள்ளார். இதில் இடம்பெற்றுள்ள டாப் 5 பிரபலங்களின் சம்பள பட்டியல் இது.

 

1.சல்மான் கான் - ரூ.253 கோடி  

2. விராட் கோலி - ரூ.228 கோடி 

3. அக்ஷய் குமார் - ரூ.185 கோடி 

4.தீபிகா படுகோனே - ரூ.112.8 கோடி 

5. தோனி - ரூ.101.77 கோடி 

 

கோலிவுட் டாப் 5 நடிகர்கள் 

14. ரஜினி - ரூ 50 கோடி 

26. விஜய் - ரூ.30.33 கோடி 

29. விக்ரம் - ரூ.29 கோடி 

34. சூர்யா, விஜய் சேதுபதி - ரூ.23.67 கோடி

 

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.66.75 கோடியுடன் 11-வது இடத்திலும்,நடிகர் தனுஷ் ரூ.17.25 கோடி சம்பளத்துடன் 53-வது இடத்திலும் உள்ளார். இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ள ஒரே நடிகை நயன்தாரா. ரூ.15.17 கோடி சம்பளத்துடன் 69-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

 

இந்த பட்டியலை வைத்துப் பார்த்தால் கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 நடிகர்கள் ரஜினி, விஜய்,விக்ரம், சூர்யா மற்றும் விஜய் சேதுபதி தான். அடுத்த வருடமும் இது தொடருமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.