‘சாப்பாட்டில் வந்த சண்டை’.. திருமணத்தன்றே விவாகரத்து.. விநோத தம்பதியர்!

Home > தமிழ் news
By |

திருமணம் ஆன அதே நாளில், திருமண தம்பதியர் பிரிந்துள்ள செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘சாப்பாட்டில் வந்த சண்டை’.. திருமணத்தன்றே விவாகரத்து.. விநோத தம்பதியர்!

மணம் புரிந்துகொண்டு வாழ்வது அல்ல வாழ்க்கை, மனம் புரிந்துகொண்டு வாழ்வதே வாழ்க்கை என்னும் வரிகளுக்கேற்ப  திருமணம் என்னும் புதிய பந்தத்தில் இணையும் ஆணுக்கும் பெண்ணுக்கும் முதற்கட்ட தேவையாக இருப்பது ஒருவருக்கும் மற்றொருவருக்கும் இடையே இருக்க வேண்டிய புரிதல்தான்.

அந்த புரிதலின்படி, இருவரும் தாங்கள் வாழப்போகும் வாழ்க்கைக்கான ஒப்பந்தத்தை முன்கூட்டியே ஒரு ஆயுட்கால உடன்படிக்கையின்பேரில் அமைத்துக் கொள்வதுதான் திருமணம். ஆனால் அரேஞ்ச் மேரேஜை பொருத்தவரை, அந்த புரிதல் உண்டாக, சில நாட்களாவது ஆகலாம். அதுவரை விட்டுக்கொடுத்தலும், பொறுமையும், பொறாமையில்லாத தன்மையும் அவசியமாகிறது.

எனினும் விவாகரத்து என்னும் எண்ணம் கணவன்- மனைவிக்கிடையே வருவதற்கு பலவிதமான கருத்து வேறுபாடுகள், காரணமாக இருக்கலாம். ஆனால் சாப்பாடு ஒரு காரணமாக இருந்தால் நம்ப முடியுமா? அதுவும் கல்யாணத்தன்றே? அதுவும் திருமணமாகி சில மணிநேரங்களிலேயே? அப்படி ஒரு சம்பவம்தான் அகமதாபாத்தில் நடந்துள்ளது.

ஆம், திருமணம் முடிந்து பந்தியில் உணவருந்திக்கொண்டிருந்த திருமண தம்பதியருக்கு சாப்பிடும்போது, சாப்பாட்டினால் எழுந்த கருத்து மோதல் காரணமாக இருவரும் வாதம் பண்ணிக்கொள்ளத் தொடங்கியுள்ளனர். இதனை அடுத்து வாதம் வாக்குவாதமாக மாறியுள்ளது. அதன் பிறகு சாப்பாட்டை ஒருவர் மீது ஒருவர், தூக்கி வீசி எறிந்துள்ளனர். அவர்கள் சண்டையிட்டுக் கொள்வதை யாராலும் தடுக்கவும் முடியவில்லை.

கோபமுற்ற மணமகன் (கணவர்), தன் மனைவியை, விட்டுவிட்டு எழுந்து சென்றுள்ளார். திருமணத்துக்கு வந்த பரிசுபொருட்கள் கூட பிரிக்கப்படாத நிலையில், சாப்பாட்டுக்காக சாப்பாட்டை தூக்கி எறிந்து சண்டைபோட்ட தம்பதியர், திருமணத்தன்றே, திருமணமாகி சில நாழிகையிலேயே பிரிந்து சென்றுள்ளதோடு, விவாகரத்து செய்யவும் முடிவு செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அநேகமாக மிக விரைவான நேரத்துக்குள் பிரிந்த தம்பதிகள் இவர்களாகத்தான் இருக்கும் என்று பலரும் கூறிவருகின்றனர்.

MARRIAGE, DIVORCE, COUPLE, FIGHT, FOOD