'நீங்க உங்க வேலைய பாருங்க'..நாங்க எங்க வேலைய பாக்குறோம்!

Home > தமிழ் news
By |

பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில், 2019-20 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை,இடைக்கால நிதியமைச்சர் பியூஷ் கோயல் இன்று தாக்கல் செய்தார்.வரும் மே மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தச் சூழலில், மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யப்பட்ட கடைசி பட்ஜெட் என்பதால்,இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

'நீங்க உங்க வேலைய பாருங்க'..நாங்க எங்க வேலைய பாக்குறோம்!

இந்நிலையில் மத்திய இடைக்கால பட்ஜெட்டில் வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்வு,ஆண்டு வருமானம் ரூ. 6.5 லட்சமாக உள்ளவர்கள் ரூ. 1.5 லட்சத்தை குறிப்பிட்ட சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தால் வருமான வரி செலுத்த தேவையில்லை போன்ற திட்டங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.இந்நிலையில் இது தேர்தலுக்கான பட்ஜெட் என எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

இதனிடையே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட உடனே மீம்ஸ் கிரியேட்டர்கள் தங்களின் வேலையை ஆரம்பித்து விட்டார்கள்.தமிழ்,ஆங்கிலம்,ஹிந்தி என பல மொழிகளில் மீம்ஸ்களை தெறிக்க விட்டு வருகிறார்கள்.இன்று பட்ஜெட் தொடர்பாக வெளியான மீம்ஸ்கள் தான் ட்விட்டரை கலக்கி வருகிறது.

TWITTER, NARENDRAMODI, UNION MINISTER PIYUSH GOYAL