இனி உங்கள் ’கார்களை’ வெள்ளத்தில் இருந்து பாதுகாக்க ’இதை’ பயன்படுத்தலாம்!

Home > தமிழ் news
By |
இனி உங்கள் ’கார்களை’ வெள்ளத்தில் இருந்து பாதுகாக்க ’இதை’ பயன்படுத்தலாம்!

2015ஆம் ஆண்டு சென்னையில் உண்டான வெள்ளப் பாதிப்பில் இருந்து பலரும் மீண்டிருக்க மாட்டார்கள். கனமழையினால் சாலைகள் கடல் போலவும் கார்கள் கப்பல் போலவும் மாறிப்போயின. பலரும்  தங்களது காஸ்ட்லி கார்கள் வெள்ளத்தில் மூழ்கிவிடாமல் இருக்க வேண்டுமென,  வேளச்சேரி பாலத்தின் மீது பலரும் தத்தம் கார்களை எடுத்து வந்து  வரிசையாக பார்க்கிங் செய்தனர்.

 

தற்போது கேரளாவும் இதே நிலைக்குதான் ஆட்பட்டுள்ளது. மண்சரிவினாலும், பழுதடைந்த சாலைகளாலும், பெருத்த கனமழை காரணமாகவும் பலதரப்பட்ட வாகனங்கள் நிலச்சரிவுக்குள் சிக்கி மீட்க முடியா நிலையில் உள்ளன. அப்படியே மீட்டெடுத்தாலும் அவை பழுதடைந்துள்ளன.  இப்படி எவ்வளவோ காஸ்ட்லி கார்கள் வெள்ளத்தில் மூழ்கியதையும் அடித்துச் செல்வதையும் இயற்கையின் பேரிடரின் பெயரால் தடுக்க முடியாது.

 

எனினும் தற்போது பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பால் டெலா பியூண்டே என்பவர் உருவாக்கியுள்ள The Flood Guard என்கிற car bag-ஐ பயன்படுத்தி கார்கள் மூழ்குவதையும் வெள்ளத்தில் அடித்துச் செல்வதையும் ஓரளவுக்கு தவிர்க்க முடியும் என்று பலரும் நம்புகின்றனர்.  இந்திய மதிப்பில், சுமார் 18 ஆயிரம் ரூபாய் என சொல்லப்படும் இந்த கார்டு மீடியம், லார்ஜ் என வெவ்வேறு அளவுகளில் கிடைக்கிறது. இந்த Flood Guard car bag-ஐ எஸ்யூவி, எக்ஸ்யூவி, காம்பேக்ட் முதல் சிறிய டாட்டா ஏசி, ஜிப்சி வரை பயன்படுத்த இயலும்.

 

இதனை  வெள்ள அபாயம் வரும் நேரம், தரையில் விரித்து,  அதன் மேல் காரினை ஓட்டிச் சென்று நிறுத்தி, பர்தா போன்ற இந்த கார்டை பக்கவாட்டில் இருந்து எடுத்து காரைச் சுற்று மூடி, பின் அதில் உள்ள ஸிப்களை பயன்படுத்தி ஒரு சூட் கேஸ் மேலுறையை ஸிப்பால் மூடுவது போல் மூடிக்கொள்ளலாம்.  இதனால் காருக்குள் வெள்ளம் புகாமல் பாதுகாத்துக்கொள்ள முடியும். மேலும் இதன் பக்கவாட்டில் கொடுக்கப்பட்டுள்ள கயிறுகளை பயன்படுத்தி, பக்கத்தில் இருக்கும் மரம், கம்பம் என எதிலாவது கட்டிக்கொள்ளலாம். அவற்றின் சப்போர்ட்டில் கார்கள் அடித்துச் செல்லப்படாமல் இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.

TNFLOOD, KERALAFLOOD, THEFLOODGUARDCARBAG