இந்த இரண்டு நாட்களிலும் தமிழகத்தில் பலத்த கனமழை ..மத்திய நீர்வள ஆணையம் எச்சரிக்கை !
Home > தமிழ் newsகேரளாவில் வரலாறு காணாத அளவில் பெய்த தென்மேற்கு பருவமழை பெரும் பொருட் சேதத்தையும் உயிர் சேதத்தையும் ஏற்படுத்தி விட்டு சென்றுவிட்டது.தற்போது மெதுமெதுவாக இயல்பு நிலைக்கு கேரள மக்கள் திரும்பி வருகிறார்கள்.
இந்நிலையில் தமிழகம் மற்றும் கர்நாடகாவின் கடலோர பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என மத்திய நீர்வள ஆணையம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.அதிலும் குறிப்பாக தமிழகத்தில் ஆகஸ்ட் 31, மற்றும் செப்டம்பர் 1ம் தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய நீர்வள ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,கர்நாடகத்தின் கடலோர மற்றும் தெற்குப் பகுதிகளில் இன்று கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் காவிரி, வைகை உள்ளிட்ட அணைகள் ஏற்கனவே முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், கூடுதல் நீர் வரும் என்பதால், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதில் கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் அதனால் அனைத்து மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தயார் நிலையில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதில் ஆகஸ்ட் 28 மற்றும் 29-ம் தேதிகளில் ஒடிசா, சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.