மாற்று சக்திகளில் இயங்கும் வாகனங்களை வரவேற்கும் விதமாக தேசிய உரிம சலுகை!

Home > தமிழ் news
By |
மாற்று சக்திகளில் இயங்கும் வாகனங்களை வரவேற்கும் விதமாக தேசிய உரிம சலுகை!

சொசைட்டி ஆஃப் இந்தியன் ஆட்டோமொபைல் கருத்தரங்கில் பேசியுள்ள தேசிய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி அடுத்து இந்தியாவில் வரவிருக்கும் கார்கள் தானியங்கி என்று சொல்லப்படும் ஆட்டோமேட்டிக் கார்களாகவும், எலக்ட்ரிக் பேட்டரி கார்களாகவும் உருவாக்கப்பட்டு சந்தைகளில் களமிறக்குவது மூலமாக நாம் பொருளாதார ரிதியலான சிக்கலையும், எரிபொருள் தட்டுப்பாட்டையும், சுற்றுச் சூழல் மாசுபாட்டையும் தடுக்க இயலும் என்பதால் அவற்றை வரவேற்கும் விதமாக தேசிய உரிம அனுமதி தேவையில்லை என்கிற சலுகை பற்றி கூறியுள்ளார்.


அதுமட்டுமல்லாமல், பெருகி வரும் பெட்ரோல் விலைக்கு மாற்று எரிசக்தியாக எத்தனால், ஆட்டோ கார்கள் மற்றும் பேட்டரி கார்கள் இருக்கும் என்றும் பிரதமர் மோடி முன்னதாக தெரிவித்திருந்தார். இந்தியாவில் ஆந்திரா போன்ற சில இடங்களில் பேட்டரி கார்களுக்கான எரிபொருள் ஆற்றலை உற்பத்தி செய்யும் மையங்கள் அமைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில் மெத்தனால், எத்தனால், எலக்ட்ரிக் பேட்டரி உள்ளிட்டவற்றில் இயங்கும் எந்தவித கார், ஆட்டோ, பஸ், டாக்ஸி உள்ளிட்ட வாகனங்களுக்கும் தேசிய உரிமம் தேவைப்படாது என்று நிதின் கட்காரி குறிப்பிட்டுள்ளார்.

NITINGADKARI, ALTERNATIVEFUEL, INDIA