டிரைவரே தேவைப்படாத வேநோ கார்கள்: எந்திர உலகில் பெரும் சாதனை!
Home > தமிழ் newsஓட்டுநரே தேவைப்படாத கார்கள் தயாரிக்கப்பட்டு சந்தையில் களமிறங்கியுள்ளன. கூகுளின் பேரென்ட் கம்பெனிதான் ஆல்ஃபாபெட் இன் கார்ப்பரேஷன். இந்த நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் வேநோ ஆட்டோமொபைல் நிறுவனத்தின் தயாரிப்பாக வந்துள்ளவைதான் இந்த ‘ஆட்டோமேட்டிக்’ கார்கள்.
முன்னதாகவே வடிவமைக்கப்பட்ட இந்த கார்கள், தற்போதே சந்தையில் பயன்பாட்டுக்கான கார்களாக விற்பனைக்கு களமிறக்கப்படுகின்றன. எனினும் இந்த கார்களை தற்போதைக்கு அனைவருக்கும் வழங்குவதில் சிக்கல் உள்ளதால், அமெரிக்காவின் ஃபீனிக்ஸ் மற்றும் அரிசோனா பகுதிகளில் அடுத்த மாதம் மிக குறைந்த எண்ணிக்கையில் தொடங்கப்படவுள்ள இந்த சேவை குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே வழங்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
ஜிபிஎஸ் எனப்படும் கூகுள் வழித்தடத்தை வைத்தும், சென்சார்களை பயன்படுத்தி ஹாரன் அடித்து, நிறுத்த வேண்டிய இடத்தில் நிறுத்தி, சுழல வேண்டிய-வளைய வேண்டிய இடத்தில் அவ்வாறு செய்து, சேர வேண்டிய இடத்துக்கு சென்று சேரும்படி அதிநவீன தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது.
வாகன ஓட்டுநர் தேவைப்படாத இந்த கார்களை உலகிலேயே மேற்கண்ட நிறுவனம்தான் முதன்முதலாக தயாரித்துள்ளது என்பதும், மிகப்பெரும் அறிவியல் மற்றும் எந்திர புரட்சியை அடுத்த சில ஆண்டுகளில் இந்த கார்கள் ஏற்படுத்தவுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.