ஐசிசி தரவரிசை வெளியீடு:கெத்தாக முதலிடத்தில் இரண்டு இந்திய வீரர்கள்...பட்டியலில் கலக்கி வரும் ஆப்கான் வீரர்கள்!
Home > தமிழ் newsசர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அவ்வப்போது வீரர்களின் தரவரிசை பட்டியலை வெளியிடும்.அதன் அடிப்படையில்,வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடர் கடந்த ஞாயிற்றுக் கிழமை முடிந்த நிலையில்,வீரர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது ஐசிசி.
இதில், பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும், பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் பும்ராவும் முதலிடத்தில் உள்ளனர்.பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 899 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறார். 2-வது இடத்தில் 871 புள்ளிகளுடன் துணைக் கேப்டன் ரோஹித் சர்மா உள்ளார். 3வது இடத்தில் 808 புள்ளிகளுடன் நியூசிலாந்தின் ராஸ் டெய்லர் உள்ளார்.மேலும் 767 புள்ளிகளுடன் ஷிகர் தவான் 7-வது இடத்தில் உள்ளார்.
பந்துவீச்சாளர்கள் தரவரிசையில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா 841 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் 788 புள்ளிகளுடன் 2-ம் இடத்திலும், 723 புள்ளிகளுடன் இந்திய வீரர் குல்தீப் யாதவ் 3-வது இடத்தையும் பெற்றிருக்கிறார்.மேலும் மற்றோரு இந்திய வீரரான யுவேந்திர சாஹல் 683 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளார்.
ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் 353 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.இந்த பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இந்திய வீரர்கள் யாரும் இடம் பெறவில்லை.
மேலும்,அணிகளுக்கான தரவரிசையில் இங்கிலாந்து அணி 126 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்திய அணி 121 புள்ளிகளுடன் 2-ம் இடத்திலும் உள்ளது.ஆப்கானிஸ்தான் வீரர்கள் தரவரிசை பட்டியலில் குறிப்பிடத்தகுந்த இடத்தை பெற்றிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.