ஒரே நேரத்தில் 60 புஷ் அப்ஸ்... 5 வயது சிறுமியின் அசத்தலான உடற்பயிற்சி வீடியோ!
Home > தமிழ் news
லண்டனை சேர்ந்த ப்ரைஸ் ப்ரூக்ளின் என்ற 5 வயது சிறுமி உடற்பயிற்சி செய்வதில் மிகுந்த ஆர்வம் உடையவர்.இதனால் அவரது தந்தை அவருக்கு முறையான பயிற்சி அளித்து ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயார் செய்து வருகிறார்.
ப்ரைஸின் தந்தை ஜேம்ஸ்யும் உடற்பயிற்சியில் மிகுந்த ஆர்வம் உடையவர்.அவர் உடற்பயிற்சி நிபுணராக பணியாற்றி கொண்டு தனது மகளுக்கும் பயிற்சிகளை அளித்து வருகிறார்.
அவர் தனது மகள் குறித்து கூறும் போது "ப்ரைஸ் தனது இரண்டாவது வயதில்,சிறிய அளவு எடையுள்ள உடற்பயிற்சி கருவிகளை உபயோகித்து பயிற்சி செய்வாள்.இதனை அறிந்த எனக்கு உடற்பயிற்சியின் மீது ப்ரைஸ்க்கு இருக்கும் ஆர்வம் எனக்கு புரிந்தது.இதனால் அவளுக்கு முறையான பயிற்சிகளை அளித்து அவளை ஜிம்நாஸ்டிக் வீராங்கனை ஆக்க வேண்டும் என்று விரும்பினோம்.அவளும் அந்த பயிற்சிகளை முறையாக விரும்பி செய்கிறாள் என ஜேம்ஸ் கூறினார்.
ப்ரைஸ் பயிற்சியின் போது செய்யும் உடற்பயிற்சி வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன.