‘தல, தளபதி, ஹிட்மேன்’ இவர்களில் யார் சிறந்த கேப்டன்?..அதிரடி பதிலளித்த தமிழக கிரிக்கெட் வீரர்!
Home > News Shots > தமிழ் newsதோனி, விராட் கோலி, ரோஹித் ஷர்மா இவர்கள் மூவரில் யார் சிறந்த கேப்டன் என்கிற கேள்விக்கு தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் பதில் அளித்து அசத்தியுள்ளார்.
மகேந்திர சிங் தோனி ஐசிசியின் மூன்று முக்கியமான தொடர்களில் கோப்பையை வென்று வெற்றி கேப்டன் என்கிற பெருமையை தன் வசம் வைத்துள்ளார். தோனி தற்போது கேப்டனாக இல்லாவிட்டாலும் அணியின் இக்கட்டான சூழ்நிலைகளில் இவரின் ஆலோசனையே அணியை காப்பாற்றியுள்ளது.
தற்போது இந்திய அணியின் கேப்டனாக இருப்பவர் அதிரடி பேட்ஸ்மேன் விராட் கோலி. தோனி தவறவிட்ட பல சாதனைகளை விராட் கோலி சாதித்து காட்டியுள்ளார். விராட் கோலி இல்லாத போது அணியை சிறப்பாக வழி நடத்த வேண்டிய பொறுப்பை ‘ஹிட்மேன்’ ரோஹித் ஷர்மா ஏற்றுக்கொள்வார்.
இந்த மூன்று கேப்டன்களின் தலைமையின் கீழ் விளையாடிய அனுபவம் கொண்டவர் தினேஷ் கார்த்திக். இந்த மூன்று கேப்டன்களின் சிறப்பை தினேஷ் கார்த்திக் தெளிவாக கூறியுள்ளார்.
தினேஷ் கார்த்திக் கூறியதாவது, ‘தோனி மிகவும் இயல்பானவர், ஓரே நேரத்தில் பல முடிவுகளை எடுக்கும் ஆற்றல் கொண்டவர்’என தோனி குறித்தும், ‘விராட் கோலி தன்னுடைய ஆக்ரோசத்தால் எதிரணியை மிரட்டிவிடுவார். அதிகமான தன்னம்பிக்கை கொண்டவர்’ என விராட் கோலி குறித்தும், ‘ரோஹித் ஷர்மா போட்டிக்கு முன்பே என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிக்ககூடியவர், சிறந்த தந்திரம் உடையவர்’ என ரோஹித் ஷர்மா குறித்தும் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.