'இப்போ தொடுங்க பாப்போம்'...ஆஸ்திரேலியாவிற்கு துணை பயிற்சியாளரான...இந்தியாவின் பரம வைரி!

Home > News Shots > தமிழ் news
By |

உலககோப்பை போட்டிகள் நெருங்கி வரும் நிலையில்,தோல்விகளால் துவண்டிருக்கும் ஆஸ்திரேலிய அணிக்கு புத்துணர்ச்சி அளிக்கும் விதமாக ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது.தற்போது தலைமை பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கர் நீடிக்கும் நிலையில் துணை பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் நியமிக்கப்பட்டுள்ளார். இது வீரர்களுக்கு கடும் உற்சாகத்தை அளித்துள்ளது.

'இப்போ தொடுங்க பாப்போம்'...ஆஸ்திரேலியாவிற்கு துணை பயிற்சியாளரான...இந்தியாவின் பரம வைரி!

உலககோப்பையின் நாயகன் என அழைக்கப்படும் ரிக்கி பாண்டிங்,இதுவரை 3 உலக கோப்பைகளை ஆஸ்திரேலிய அணிக்காக வென்றிருக்கிறார்.இதனால் ஆஸ்திரேலிய அணி நிச்சயம் புதிய வேகத்துடன் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.375 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள பாண்டிங், இந்தியாவிற்கு எதிரான ஆஸ்திரேலியா தொடரில் இருந்து துணை பயிற்சியாளராக பொறுப்பு ஏற்கிறார்.

இந்நிலையில் ரிக்கி பாண்டிங் வருகை குறித்து கருத்து தெரிவித்துள்ள லாங்கர்,'அவரும் நானும் நல்ல நண்பர்கள்.ஏற்கனவே நாங்கள் இருவரும் சேர்ந்து பணியாற்றி இருக்கிறோம்.இதனால் எங்களுக்குள் நல்ல புரிதல் இருக்கிறது.அவரது அனுபவம் என்பது இந்த அணிக்கு இன்றியமையாதது' என்றார் லாங்கர்.

AUSTRALIAN-BALL-TAMPERING-CONTROVERSY-2018, RICKY PONTING, 2019 WORLD CUP, COACH