இந்தோனேசியாவில் இசைநிகழ்ச்சியின்போது சுனாமி பேரலை.. வைரலாகும் வீடியோ!

Home > தமிழ் news
By |
இந்தோனேசியாவில் இசைநிகழ்ச்சியின்போது சுனாமி பேரலை.. வைரலாகும் வீடியோ!

இந்தோனேசியாவில் இன்று அதிகாலை திடீரென சுனாமிப் பேரலை தாக்கியதில், நிலங்கள், வீடுகள் சிதிலமடைந்ததோடு, சுனாமியால் பலியான உயிர்களின் எண்ணிக்கை சுமார் 280-க்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. 


இந்தோனேசியாவின் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளுக்கு பாலமாக உள்ள முக்கிய பகுதியான, ஜந்தா ஜலசந்தியை ஒட்டிய கடற்கரை பகுதிகளில் திடீரென உருவான கடல் கொந்தளிப்பு காரணமாகவும், கடலுக்கு அடியில் உண்டான நிலஅதிர்வு காரணமாகவும், ஜாவா தீவில் இருக்கும், பெண்டக்லங்க், செரங், தெற்கு லம்புங் உள்ளிட்ட பகுதிகளில் சுனாமி தாக்கியுள்ளது.


2004 ஆம் ஆண்டு டிசம்பரில் இந்திய பெருங்கடலில் உருவான சுனாமியில் 1 லட்சம் பேர் உயிர்-உடமைகளை இழந்தனர். இதனை அடுத்து தற்போது உருவாகியுள்ள சுனாமி பேரிடரில் 280க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதேபோல் 700 பேருக்கும் அதிகமாக காயமடைந்துள்ளதாகவும், 50க்கும் மேற்பட்டோரை காணவில்லை எனவும் இந்தோனேசியாவின் தேசிய பேரிடர் மேலாண்மை செய்தித் தொடர்பகம் கூறியுள்ளது.


இதனிடையே இந்தோனேசியாவில் நள்ளிரவில் நிகழ்ந்துகொண்டிருந்த ஒரு நேரலை இசை நிகழ்ச்சியின்போது சுனாமிக்கு முந்தைய நில அதிர்வு வீடியோவாக பதிவாகி ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

TSUNAMI, INDONESIATSUNAMI, VOLCANO, VIRALVIDEO