'மழை தொடர்பான பதற்ற செய்திகளை'.. வாட்ஸ்அப்பில் பரப்பி பயமுறுத்தாதீர்கள்!
Home > தமிழ் newsமழை தொடர்பான பதற்ற செய்திகளை வாட்ஸ் அப்பில் நம்பி, யாருக்கும் பரப்பி தொந்தரவு அளிக்காதீர்கள் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் சமீபத்தில் பெரும் மழை பொழியும் என ரெட் அலெர்ட் வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்பட்டு, வாபஸ் பெறப்பட்டது. தொடர்ந்து மழை தொடர்பான தகவல்களில் தெளிவு இல்லாததால் மக்கள் பெரும் குழப்பத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்தநிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது பேஸ்புக் பக்கத்தில் மழை தொடர்பான தகவல்களை பதிவிட்டுள்ளார். அதில், ''சென்னையைப் பொறுத்தவரை நாளை முதல்(இன்று) வறண்ட வானிலையே காணப்படும். சில பகுதிகளில் மட்டும் மழை பெய்ய வாய்ப்புண்டு.10-ம் தேதிக்குப் பின் தமிழகத்தில் படிப்படியாக மழை குறையும். ஒரு சில இடங்களில் மட்டுமே மழை பெய்யக்கூடும்.நாளை முதல் படிப்படியாக மழை குறையும்.
அடுத்து ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக இன்னும் சில நாட்கள் காத்திருந்தால்,மீண்டும் பரவலாக மழை பெய்யும் நாட்கள் வரும். கடந்த ஒரு வாரத்தில் தமிழகத்தில் 100 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. வடகிழக்குப் பருமழையில் தமிழகத்தில் 440 மி.மீ. மழை பெய்ய வேண்டும். அந்த வகையில், 20 சதவீத மழையை மட்டுமே நாம் பருவமழைக்கு முன் பெற்றிருக்கிறோம்.அதுவரை வாட்ஸ் அப்பில் வரும் எந்தவிதமான வதந்திகளையும் நம்பி, யாருக்கும் பரப்பி பதற்றத்தை உண்டாக்காதீர்கள்,''இவ்வாறு தெரிவித்துள்ளார்.