96 BNS Banner
Ratsasan BNS Banner

சபரிமலை வழக்கில்.. மறு சீராய்வு மனுவை தள்ளுபடி.. உச்சநீதிமன்றம்!

Home > தமிழ் news
By |
சபரிமலை வழக்கில்.. மறு சீராய்வு மனுவை தள்ளுபடி.. உச்சநீதிமன்றம்!

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் செல்ல பெண்களுக்கு இருந்த தடையை நீக்கி, சட்ட ரீதியான பிரிவு 25, 21 உள்ளிட்டவற்றின்படி, அனைத்து வயது பெண்களையும் கேரளாவில் உள்ள சபரிமலை கோவிலுக்குள் அனுமதித்து நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கேரள முதல்வர் பினராய் விஜயனை பொறுத்தவரை இந்த தீர்ப்புக்கு மறு சீராய்வு கேட்டு மனு அளிக்கும் எண்ணமும் இல்லை என்று கூறியிருந்தார். 

 

எனினும் இந்த தீர்ப்பில் அதிருப்தி அடைந்த சில பெண்களும், இன்னும் பல அமைப்புகளும் இந்த தீர்ப்பினை மறு சீராய்வு செய்யக் கோரி அளித்த அவசர கால மனுவை ஏற்க முடியாது என்றுச் சொல்லி உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

 

மேலும் சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் அனுமதிப்பது தொடர்பான ஏற்பாடுகளில் அக்கோவிலின் தேவசம் போர்டினர் மும்மரமாக செயல்படுவதோடு, கோவிலில் பெண் ஊழியர்களை பணிக்கு அமர்த்துவது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

SABARIMALAVERDICT, SABARIMALATEMPLE, KERALA, SUPREMECOURT, DELHI