சென்னையில் மழை தொடருமா?..தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம் !

Home > தமிழ் news
By |
சென்னையில் மழை தொடருமா?..தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம் !

நேற்றிரவு சென்னை முழுவதும் பரவலாக மழை பெய்தது.கனமழையாக இல்லாவிடினும், கண்ணைக்கூசச் செய்யும் மின்னல்களுடன் இரவு முழுவதும் மழை நீடித்தது.

 

இந்தநிலையில் தமிழகம் முழுவதும் மழை இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்ற கேள்விக்கான விளக்கத்தை, தமிழ்நாடு வெதர்மேன் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள விளக்கத்தில், ''அடுத்த 10 நாட்களுக்கு தமிழ்நாடு,கேரளா,குடகு பகுதிகளில் மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு,குடகு மற்றும் கேரள பகுதிகளில் வெள்ள பாதிப்பு எதுவும் இருக்காது. கேரளா,குடகு பகுதிகளில் வழக்கமான அளவைவிட மழையின் அளவு குறைவாகவே இருக்கும்.

 

ஒருநாள் மழை வராவிடில் மறுநாள் கண்டிப்பாக மழை இருக்கும். செப்டம்பர் மாதம் 1-ம் தேதி வரையில் இது நீடிக்கக்கூடும். பொதுவாக மாலை மற்றும் அதிகாலை நேரங்களில் மழை பெய்யக்கூடும்.கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் மழை முன்னதாகவே தொடங்கி, இரவுவரையில் பெய்யக்கூடும்,'' இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.