‘அந்த அணியுடன் மோதனும்னா கோலிக்கு ஓய்வு தேவை’.. பிசிசிஐ-யின் அதிரடி முடிவு!

Home > தமிழ் news
By |

நியூஸிலாந்திற்கு எதிரான கடைசி 2 ஒருநாள் போட்டி மற்றும் டி20 தொடர்களிலிருந்து விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிரடியாக அறிவித்துள்ளது.

‘அந்த அணியுடன் மோதனும்னா கோலிக்கு ஓய்வு தேவை’.. பிசிசிஐ-யின் அதிரடி முடிவு!

நியூஸிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. நேற்று மெக்லீன் மைதானத்தில் இரு அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த நியூஸிலாந்து அணி, இந்திய பெளலர்களின் பந்துவீச்சுக்கு தாக்கு பிடிக்கமுடியாமல் 38 ஓவர்களில் 157 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நியூஸிலாந்து அணியில் அதிகபட்சமாக கேப்டன் வில்லியம்சன் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணியின் தரப்பில் குல்தீப் 4 விக்கெட்களையும், ஷமி 3 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

பின்னர் விளையாடிய இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. கேப்டன் விராட் கோலி 5 ரன்களில் அரை சத்தத்தை தவறிவிட்டார். அவர் 45 ரன்கள் எடுத்திருந்த போது ஃபெர்குசன் பந்துவீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

இப்படி நியூஸிலாந்திற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணியிலிருந்து கேப்டன் விராட் கோலிக்கு கடைசி 2 ஒருநாள் போட்டி மற்றும் டி20 தொடர்களிலிருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

விராட் கோலியின் பணிச்சுமை அதிகமாக இருப்பதாகவும், அடுத்து இந்தியாவிற்கு வந்து விளையாடவிருக்கும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டித் தொடர்களில் விளையாட வேண்டும் என்பதால் விராட் கோலிக்கு ஓய்வு தேவை, அதற்காக அவருக்கு இந்த ஒய்வு அளிக்கப்படுவதாகவும், இந்திய அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

VIRATKOHLI, BCCI, INDVNZ, ODI, T20