'தற்கொலை அல்ல விபத்து'... 11 பேர் மரணத்தில் 'திடீர்' திருப்பம்!

Home > தமிழ் news
By |
'தற்கொலை அல்ல விபத்து'... 11 பேர் மரணத்தில் 'திடீர்' திருப்பம்!

இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த சம்பவம்  டெல்லி புராரி பகுதியில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் தூக்கில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததுதான்.அது தற்கொலை என பரப்பரப்பாக பேசப்பட்டது.ஆனால் அது  விபத்துதான் என தடயவியல் ஆய்வாளர்கள் தற்போது தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

டெல்லி புராரி பகுதி மக்கள் இன்னும் அந்த அச்சத்தில் இருந்து விடுபடவே இல்லை.அந்த வீட்டைக் கடக்கும் மக்கள், இன்னும் அச்சத்துடனேயே செல்கின்றனர்.இந்தச் சம்பவம் நடந்து இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், அவர்களின் தற்கொலைக்கான சரியான காரணத்தை கண்டுப்பிடிப்பது  காவல்துறைக்கு பெரும் சவாலாக இருந்தது.இதனால், இந்த வழக்கில் உளவியல் பிரேதப் பரிசோதனை தேவைப்படுவதாக டெல்லி போலீஸார் சி.பி.ஐ-க்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

 

இந்தநிலையில் இந்த வழக்கு தொடர்பாக, தடயவியல் நிபுணர்கள் நடத்திய பரிசோதனை முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.இறந்தவர்கள் குறித்து  உளவியல் ரீதியாக நடத்தப்பட்ட ஆய்வில், ''அந்த சம்பவம் தற்கொலை அல்ல.அவர்கள் நடத்திய சடங்கின்போது ஏற்பட்ட விபத்து, இறந்தவர்கள் யாரும் தங்கள் வாழ்வை முடித்துக்கொள்ள விரும்பவில்லை,'’ என சிபிஐ ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் இறந்தவர்களின் குடும்ப உறுப்பினரான லலித் சுந்தவத் என்பவர் தன் இறந்த தந்தையைப் பார்த்ததாகவும், அதனால் அவர் கூறியதாக சில விஷயங்களைத் தன் குடும்ப உறுப்பினர்களை செய்யச் சொல்லியதாகவும் கூறப்படுகிறது. மேலும், அவர்தான் தன் குடும்ப உறுப்பினர்களை வாய் மற்றும் கையைக் கட்டி, இந்தச் சடங்குகளை செய்யச் சொல்லியிருக்கலாம் எனவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.