''ஷான் மார்ஷின் விக்கெட் போக காரணமான பால்''...ஸ்லோ யார்க்கரை நான் போடல,அவர் தான் போட சொன்னாரு!

Home > தமிழ் news
By |
''ஷான் மார்ஷின் விக்கெட் போக காரணமான பால்''...ஸ்லோ யார்க்கரை நான் போடல,அவர் தான் போட சொன்னாரு!

மெல்போர்ன் டெஸ்ட் போட்டியை இந்தியாவிற்கு சாதகமாக திருப்பியதில் முக்கிய பங்கு பும்ராவை தான் சேரும்.அதிலும் அவரின் வேகப்பந்து வீச்சில் ஷான் மார்ஷின் விக்கெட் பறிபோனது மிகமுக்கியமான ஒன்றாகும்.அப்போது அந்த பந்தை வீசியதின் ருசிகர பின்னணி குறித்து பும்ரா பகிர்ந்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் கூறுகையில்''நான் பந்து வீசிக் கொண்டிருந்த போது பிட்சு மந்தமாக இருந்தது.பந்தும் சற்று இலகுவாகி விட்டது.இதனால் போட்டியில் பெரிய முன்னேற்றம் ஒன்றும் இல்லை.அந்த நேரத்தில் தான் கடைசி பந்தை வீச வந்தேன்.அப்போது ரோஹித் ஷர்மா மிட் ஆஃபில் நின்று கொண்டிருந்தார்.அவர் திடீரென என்னிடம் வந்து  ‘நீ இந்த பந்தை வேகம் குறைந்த ஸ்லோயர் பாலாக ஏன் போடக்கூடாது,நீ ஒருநாள் கிரிக்கெட்டில் போடுவது போல தான் இதுவும் என்றார்.

 

ரோஹித் சொன்னது எனக்கு ஒரு சிறந்த யோசனையாகவே பட்டது.நானும் முயற்சி செய்து பார்க்கலாம் என்று ஸ்லோ பாலாக பந்தை வீசினேன்.உடனே அதற்கான பலனும் எனக்கு கிடைத்தது.ஷான் மார்ஸும் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார்.

 

ஒருநாள் கிரிக்கெட்டில் 10 ஓவர்கள்தான் வீசுவோம்.அதனால் யார்க்கர் வீசுவதில் எந்த பிரச்சனையும் இல்லை.ஏனெனில் யார்க்கர் வீசுவது அவ்வளவு எளிதான ஒன்று அல்ல.அதற்கு அதிக சக்தி தேவை, டெஸ்ட் கிரிக்கெட்டில் 20 ஓவரக்ள் வீசி விட்டு யார்க்கர்களை சக்தியுடன் வீசுவது கடினம்.இருப்பினும் ரோஹித் ஷர்மா கூறிய யோசனை எனக்கு மிகவும் கைகொடுத்தது என தெரிவித்தார்.

CRICKET, INDIA VS AUSTRALIA, BUMRAH, ROHIT SHARMA, SHAUN MARSH