'அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய கேப்டன்'...வைரலாகும் புகைப்படம்!
Home > தமிழ் newsமருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், அங்கு மனைவி மற்றும் நண்பர்களுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடியுள்ளார்.
இரண்டாம் கட்ட சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா உடன் நண்பர்கள் வீட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடியுள்ளார்.அந்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில வருடங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருடைய குரலில் பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து,அமெரிக்காவில் தங்கி சிகிச்சைப் பெற்றார்.அதன்பிறகு இந்தியா திரும்பிய அவர் வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார்.
இந்நிலையில் இரண்டாம் கட்ட சிகிச்சைக்காக கடந்த 18ம் தேதி அவர் அமெரிக்காவுக்கு மனைவி பிரேமலதா உடன் சென்றார்.அங்கு தனது நண்பர்கள் வீட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்.இது தொடர்பான புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள், தேமுதிக தொண்டர்களுக்கு கடும் உற்சாகத்தை அளித்துள்ளது.சிகிக்சை முடிந்து கேப்டன் விரைவில் வீடு திரும்புவார் என அவரது தொண்டர்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள்.
Celebrated #Christmas with friends in #USA.#கிறிஸ்துமஸ் விழாவை அமெரிக்காவில், நண்பர்களோடு கொண்டாடிய போது எடுத்த படங்கள். pic.twitter.com/zDDOrAP2rd
— Vijayakant (@iVijayakant) December 29, 2018