'நீ குண்டாக இருக்கிறாய்...கணவரால் வெறுத்து ஒதுக்கப்பட்ட 'சாதனைப்பெண்'
Home > தமிழ் newsபலருடைய அவமானங்கள் அவர்களின் வாழ்க்கையில் சாதிப்பதற்கு பெரும் உந்து சக்தியாக இருக்கும்.அந்த வகையில் கணவன் நீ குண்டாக இருக்கிறாய் என்று வெறுத்து ஒதுக்கியதால் பாடி பில்டிங் சாம்பியனாக உருவெடுத்துள்ளார் சென்னையைச் சேர்ந்த ரூபி பியூட்டி.
6 வயது குழந்தையின் தாயான ரூபி, அசாமில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் முதலிடம் பெற்று அசத்தியுள்ளார்.இந்த சாதனைகள் அனைத்தும் மிக எளிதாக நடந்து விடவில்லை.வலியும்,சோதனைகளும் நிறைந்த அந்த பயணம் குறித்து விவரிக்கிறார் ரூபி." எனது உடல் பருமனால், என் கணவருக்கு என் மீது அன்பில்லாமல் போனது. அப்போது தான் எனது நிலை குறித்து நான் உணர்ந்தேன். உடற்பயிற்சி நோக்கி அந்த சமயத்தில் தான் என் முழு கவனத்தையும் திருப்பினேன்’.
‘முதலில் நான் நடைப்பயிற்சியை ஆரம்பித்தேன். அதனால் மெல்ல மெல்ல எடை குறைந்தது. ஆனால் குழந்தை பெற்ற பிறகு எடை குறைப்பது என்பது மிகவும் கடினமாக இருந்தது. ஆனால், தொடர்ந்து என் இலக்கின் மீது தீவிரமாக இருந்தேன். அதனால் தான் இந்த நிலைக்கு வந்துள்ளேன்’ என்கிறார் உறுதியாக.
மேலும் அவர், ‘மிஸ்.சென்னை பட்டத்தை வென்றதோடு அசாமில் நடந்த தேசிய அளவிலான போட்டியிலும் வென்று சாதித்துள்ளார்.பெண்களால் பாடி பில்டிங் துறையிலும் சாதனைகள் செய்ய முடியும் என்பதை நிரூபித்ததோடு இந்தத் துறையில் நம் மாநிலத்தில் இருந்து பெண்களே இல்லை’ என்ற தனது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
பல தடைகளின் நடுவிலும் சாதிக்க துடிக்கும் பெண்களுக்கு ரூபி பியூட்டி நிச்சயம் ஒரு ரோல் மாடல் தான் !