'தேவைப்பட்டா மட்டும் பயன்படுத்திக்கிறாங்க'.. மஹத் ஆவேசம்!

Home > தமிழ் news
By |
'தேவைப்பட்டா மட்டும் பயன்படுத்திக்கிறாங்க'.. மஹத் ஆவேசம்!

தலைவர் பதவிக்கு யாஷிகா-மஹத் இருவரும் போட்டியிடுவது போலவும்,மஹத் ஒவ்வொரு போட்டியாளராக சந்தித்து தனக்கு வாக்களிக்குமாறு கேட்க, அவர்கள் யாஷிகாவுக்கே வாக்களிப்போம் என்று சொல்வது போலவும் முதல் ப்ரோமோவில் காட்சிகள் வெளியாகி இருந்தன.

 

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான 2-வது ப்ரோமோ வீடியோவில் ஏதாவது ஒரு விஷயத்துக்கு நான் வேணுமுன்னா நல்லா பேசுறாங்க,வேணுமுன்னா நல்லா பேச மாட்றாங்க என்கிறார். அவர் சொல்வதை வைத்துப்பார்க்கும் போது மும்தாஜை தாக்குவது போல தெரிகிறது.

 

இதனால் ஆத்திரமடையும் மும்தாஜ் எனக்கு பேச புடிக்கல என்று ஆவேசமாக எழுந்து செல்கிறார். தொடர்ந்து மும்தாஜ்-மஹத் இடையே மோதல்கள் ஏற்படுவது போல காட்சிகள் உள்ளதால்,இன்றைய இரவு பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.