முன்னாள் முதல்வர்களுக்கு 'பாரத ரத்னா' விருது வேண்டும்: இந்நாள் முதல்வர்!

Home > தமிழ் news
By |
முன்னாள் முதல்வர்களுக்கு 'பாரத ரத்னா' விருது வேண்டும்: இந்நாள் முதல்வர்!

பிரதமர் மோடிக்கு தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

 

அதில் முன்னாள் முதல்வர்களான அறிஞர் அண்ணாதுரை, திமுக கட்சி சார்பில் இருந்து தமிழகத்தின் முதல்வரானவர்.  தமிழகத்தில் பல விரும்பத்தக்க மாற்றங்களை செய்தார். இதேபோல் அதிமுக-வின் பொதுச் செயலாளராக முன்பிருந்தவரும், மறைந்த முதல்வருமான ஜெயலலிதா அதிமுக சார்பில் மலிவு விலைத் திட்டங்கள் தொடங்கி மலைவாழ் மக்கள் நலத்திட்டங்கள் உட்பட பலவற்றையும் செய்துள்ளார்.

 

ஆக முன்னாள் முதல்வர்கள் அண்ணா மற்றும் ஜெயலலிதா இருவருக்கும், இந்திய அரசின் கவுரம்மிக்க விருதாக கருதப்படும் பாரத ரத்னா விருதினை வழங்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு எழுதிய அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

 

EDAPPADIKPALANISWAMI, JAYALALITHAA, BHARATRATNA, CNANNADURAI