பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து 'போராட்டத்தில்' ஈடுபட்ட தோனி?.. விளக்கம் உள்ளே!

Home > தமிழ் news
By |
பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து 'போராட்டத்தில்' ஈடுபட்ட தோனி?.. விளக்கம் உள்ளே!

தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து,காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடந்த திங்கட்கிழமை(செப்டம்பர் 10) பந்த் அறிவித்திருந்தன. அதே நாளில் தோனி தனது மனைவி சாக்ஷியுடன் பெட்ரோல் பங்கில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.

 

இதுகுறித்து சமூக வலைதளங்களில் தோனி பந்திற்கு ஆதரவு கொடுத்ததாக தகவல்கள் வெளியாகின. மேலும் தோனியின் புகைப்படத்தைப் பகிர்ந்து பலரும் தங்களுக்கு தோன்றிய வாசகங்களை எழுத ஆரம்பித்தனர்.

 

இந்தநிலையில் இந்த புகைப்படம் குறித்த உண்மையான விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி சிம்லாவில் உள்ள பெட்ரோல் பங்கில் ஷூட்டிங் எடுக்கும்போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

 

பந்த் சமயத்தில் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் உலா வந்ததால், தோனி பந்திற்கு ஆதரவு கொடுத்தது போன்ற தோற்றம் உருவாகி விட்டது.

MSDHONI, PETROLPRICEHIKE