போதையில் 'கேப்' டிரைவர்.. வண்டியை தானே ஓட்டிச்சென்ற பயணி.. வைரல் வீடியோ!
Home > தமிழ் newsபெங்களூருவில் உள்ள கெம்பே கவுடா ஏர்போர்ட்டில் இறங்கிய சூர்யா ஆர்கண்டி என்பவர் ஒரு யூபர் கேப் ஒன்றை புக் செய்திருக்கிறார். சிறிது நேரம் கழித்துவந்த கேபில் எறி அமர்ந்த முதலே, சூர்யாவுக்கு கேப் டிரைவர் மீதான சந்தேகம் எழுத் தொடங்கியது.
உண்மையில் சூர்யா, கேப் புக் செய்த போது, யூபர் அப்ளிகேஷனில் காட்டப்பட்ட கேப் டிரைவருக்கும், வந்திருப்பவருக்குமே ஒற்றுமையே இல்லை, முழுமையாக வேறு ஒரு நபர் வந்திருக்கிறார் என்பதை அறிந்துகொண்டார். ஆனால் அதில் இருந்து சூர்யா மீள்வதற்குள் அவருக்கு அடுத்த அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. வந்திருந்த கேப் டிரைவர் ஆள் மாறி வந்ததுமல்லாமல், நன்றாக மது அருந்திவிட்டு முழு போதையில் முற்றும் சுய நினைவைத் துறந்த நிலையில் இருந்திருக்கிறார். அவரை வைத்து எப்படி தேர் இழுப்பது என்று யோசித்த சூர்யா, தான் போக வேண்டிய இடத்துக்கு அவசரமாக போக வேண்டும் என்பதால், வேறு வழியின்றி தானே நேரடியாக களம் இறங்கி, கேபை ஓட்டத் தொடங்கிவிட்டார்.
அதுமட்டுமல்ல, அந்த நிலையில் இருந்த டிரைவரிடம் பேச்சுக்கொடுத்துக்கொண்டே, அவரை வீடியோ எடுத்து தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, யூபர் கேபில் கம்ப்ளெய்ண்ட் செய்திருக்கிறார். தங்கள் குழு இதனை விசாரிக்கும் என்றும் சிரமத்துக்கு வருந்துவதாகவும் யூபர் பதில் தெரிவித்துள்ளது. டிரைவரை பக்கத்து சீட்டில் உட்கார வைத்துவிட்டு, தானே தன் வீட்டுக்கு வண்டியை செலுத்திய முதல் பயணி அநேகமாக இவராகத்தான் இருப்பார்.
Here's a video of the driver who was drunk enough to not know he was being recorded. He was not the driver claimed by the app either. pic.twitter.com/IPnwBkTZ7R
— Surya Oruganti (@suryaoruganti) September 9, 2018