‘தூக்கி அடிச்ச பேட்ஸ்மேன்’.. பென் கட்டிங் முகத்தில் ‘கட்டிங்’ போட்ட பந்து.. வைரல் வீடியோ!

Home > தமிழ் news
By |

இந்தியாவில் ஐ.பி.எல் டி20 போட்டிகளைப் போலவே ஆஸ்திரேலியாவில் பிக் பேஷ் லீக் போட்டிகள் என்கிற பெயரில் உள்ளூர் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.

‘தூக்கி அடிச்ச பேட்ஸ்மேன்’.. பென் கட்டிங் முகத்தில் ‘கட்டிங்’ போட்ட பந்து.. வைரல் வீடியோ!

பிரிஸ்பேனில் நடந்த இந்த பிக் பேஷ் லீக் போட்டியில் மெல்போர்னின் ரனகேட்ஸ் அணியும் மற்றும் பிரிஸ்பேனின் ஹீட் அணியும் மோதியதில்  மெக்கல்லத்தின் அரை சதத்தின் உதவியோடு  பிரிஸ்பேன் அணி 8 விக்கெட் இழப்புக்கு 144 ரன்களை எடுத்திருந்தது.

அடுத்து 145 என்கிற இலக்குடன் களம் இறங்கிய மெல்போர்ன் அணியில் மார்கஸ் ஹேரிஸ் பேட்டிங் செய்தார். அப்போது தன் பேட்டில் பட்ட முதல் ஓவரின் 4-வது பந்தினை மார்கஸ் ஹேரிஸ் தூக்கி அடித்துள்ளார். ஃபீல்டிங்கில் நின்ற பென் கட்டிங் அந்த பந்தை கேட்ச் செய்துவிட எண்ணி, மேலே பார்த்துள்ளார்.

ஆனால் பந்து வரும் பாதை சரியாக புலப்படாததால், வேகுவேகமாக வந்த பந்தை தனது நெற்றி நடுவே வாங்கிக்கொண்டபடி பின்னோக்கி விழுந்தார். இதனால் அவரது நெற்றியில் பலத்த வெளிக்காயமும் முகத்தில் வலுவான உள்காயமும் உண்டானது.இதனை அடுத்து, மருத்துவர்கள் குழு அவருக்கு சிகிச்சை அளித்தது. சிகிச்சைப் பிறகு தான் நலமுடன் இருப்பதாக ட்விட்டரில் தெரிவித்தார்.

AUSTRALIA, CRICKET, VIRALVIDES, BIZARRE, BENCUTTING, BBL, BRISBANEHEAT, MELBOURNE