துப்பாக்கி 2 எப்போது?..இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் 'எக்ஸ்குளூசிவ்' பதில்!

Home > தமிழ் news
By |
துப்பாக்கி 2 எப்போது?..இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் 'எக்ஸ்குளூசிவ்' பதில்!

6-வது பிஹைண்ட்வுட்ஸ் கோல்டு மெடல் விருதுகள் தற்போது சென்னை டிரேட் செண்டரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நட்சத்திரங்கள், பிரபலங்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்து வருகின்றனர்.

 

இதில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்க்கு பிஹைண்ட்வுட்ஸ் சார்பில் 'பெஸ்ட் சோசியல் ரெஸ்பான்ஸிபிள் பிலிம்மேக்கர்' விருது எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் கையால் வழங்கப்பட்டது. அப்போது தளபதி ரசிகர்கள் துப்பாக்கி 2? எப்போது வரும் என கேள்வி எழுப்பினர்.

 

பதிலுக்கு முருகதாஸ் 'துப்பாக்கி 2' கண்டிப்பாக வரும் என தெரிவித்தார்.சூப்பர்ஸ்டார் ரஜினி படம் குறித்து கேட்டபோது,'' அரசியல் படமாக இருக்காது. ஆனால் கண்டிப்பாக பக்கா மாஸ் படமாக இருக்கும்,'' என்றார்.