பயணவழியில் ஸ்மார்ட்போனை கை தவறி விட்டுட்டா, இதுதான் கதி!
Home > தமிழ் newsஸ்மார்ட்போன்கள் வந்துவிட்ட பிறகு அவற்றை மிகவும் ஸ்மார்ட்டாக பிடிக்கத் தெரியவே பலர் பழக வேண்டி இருந்தது. அத்தனை எளிதான முறையில் கைக்கு அடக்கமாக பிடித்துக்கொள்ளும் வகையில் இருந்தாலும், ஸ்லிம்மாக இருக்கும் செல்போனை பல சமயம் இரண்டு கைகளாலும் பிடிக்க வேண்டியுள்ளது. ஒற்றைக் கைகளால் ஸ்மார்ட் போன் பிடித்தபடி செல்போன் நோண்டிக்கொண்டே பேருந்து, ரயில்களில் பயணித்த பலரும், வண்டி ஒரு முறை குலுங்கியதும், தவறி செல்போனை விட்டிருக்கின்றனர்.
இந்த பயணங்களில்தான் இப்படி என்றால், சில நண்பர்கள் பனிமலைகளுக்கு சறுக்கல் பயணவழியை மேற்கொண்டுள்ளனர். அப்போது அவர்களில் ஒருவர் செல்போனை தவறவிட, அந்த இறக்கத்தில் சாகச வீரர்களையும் மிஞ்சும் அளவிற்கு செல்போன் அதிவேகமாக சறுக்கிக் கொண்டே நீண்ட தூரம் போவதையும், அதை பிடிக்க முயற்சி செய்யும் வீரர்கள் இன்னும் அதிவேகமாக பனிச்சறுக்கில் ஈடுபடுவதையும் இணையத்தில் பரவும் இந்த வீடியோவில் பார்க்க முடிகிறது.
இடையிடையே செல்போனை பிடிக்க முயன்ற பலரும் பல்டி அடித்து விழ, கடைசியில் ஒருவர் மட்டும் படுத்துக்கொண்டே சறுக்கல் செய்து அந்த செல்போனை தடுக்கிறார். அதன் பின், மேலிருந்து இறங்கிக்கொண்டே வந்தவர் செல்போனை பெற்றுக்கொள்கிறார். தவறி விழுந்த செல்போனை பிடிக்க பதறிப்போய் பனிச்சறுக்கில் ஈடுபட்ட இந்த வீரர்களின் வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.