'கர்வம்,துணிச்சல்,பயங்கரம்'.. அமலாபாலின் 'ஆடை' பர்ஸ்ட் லுக்கைப் புகழும் பிரபலங்கள்!

Home > தமிழ் news
By |
'கர்வம்,துணிச்சல்,பயங்கரம்'.. அமலாபாலின் 'ஆடை' பர்ஸ்ட் லுக்கைப் புகழும் பிரபலங்கள்!

மேயாத மான் புகழ் ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் நடிக்கும் ஆடை படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, இயக்குநர் வெங்கட் பிரபு இன்று மாலை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

 

இரும்பு ராடு ஒன்றை கையில் பிடித்துக்கொண்டு அமலாபால் மிகவும் பயத்துடன் எதையோ பார்ப்பது போல ஃபர்ஸ்ட் லுக் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் நெற்றி,கைகளில் ரத்தமுடன் அமலாபால் இருக்கும் இந்த போஸ்டருக்கு  ரசிகர்கள்,பிரபலங்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

 

இந்த போஸ்டரில் அமலாபால் கர்வம்,துணிச்சல் மற்றும் பயங்கரமாக இருக்கிறார் என ரசிகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

 

விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு, பிரதீப் குமார் இசையமைக்கிறார். வி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

AMALAPAUL, AADAI