கொல்கத்தா: திடீரென இடிந்து விழுந்த பாலம்..வாகனங்கள் நசுங்கி பயணிகள் பலி!

Home > தமிழ் news
By |
கொல்கத்தா: திடீரென இடிந்து விழுந்த பாலம்..வாகனங்கள் நசுங்கி பயணிகள் பலி!

மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகரம் கொல்கத்தாவில் உள்ளது மேஜர்ஹர் மேம்பாலம். இதன் மீது எப்போதும் போல, இன்று மாலைநேரம் பயணிகள் வாகனங்களில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென பாலம் இடிந்து விழுந்து வாகனங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளன. 

 

அதுமட்டுமல்லாமல் மேம்பாலத்துக்கு அடியில் கீழே சென்றுகொண்டிருந்த வாகனங்களில் இருந்த பயணிகளும் தலைக்கு மேல், பாலம் இடிந்து விழுந்ததால் பலரும் சம்பவ இடத்திலேயே விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளனர். 

 

ஐந்தாறு பேர் உயிரிழந்திருக்கலாம் எனவும் கருதப்படும் நிலையில், மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு விபத்தில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். 

 

ACCIDENT, KOLKATABRIDGECOLLAPSE