4 தங்கம், 4 வெள்ளி, 11 வெண்கல பதக்கங்களுடன் ஆசிய விளையாட்டில் இந்தியாவின் தரவரிசை ?
Home > தமிழ் newsஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேஷியாவின் ஜகர்த்தாவில் கோலகலமாக நடந்து வருகின்றன. கிழக்காசிய நாடுகளிடையே நிகழும் இந்த விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா மும்முரமாக பதக்கங்களை வெல்வதற்கென தன் பயிற்சி வீரர்களை களத்தில் இறக்கியிருக்கிறது என்றே சொல்லலாம். இதன்படி, இந்தியாவிற்கு இன்று மேலும் ஒரு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது.
முன்னதாக டென்னிசில் இந்தியாவின் போபண்ணா-திவிஷ் சரண் ஜோடி தங்கம் வென்றிருந்தது. இந்நிலையில், இன்று நிகழ்ந்த ஆண்கள் கலந்துகொண்ட படகுப் போட்டியின் ஒற்றையர் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த படகுப் போட்டி வீரர் துஷ்யந்த் வெண்கல பதக்கத்தை பெற்றுத் தந்துள்ளார். இதுவரை நடந்துவரும் இந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் மொத்தமாக, இந்திய நாட்டிற்கு 11 வெண்கல பதக்கங்கள் கிடைத்துள்ளன.
இதேபோல் இந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியாவுக்கு இதுவரை 4 தங்கம், 4 வெள்ளி பதக்கங்கள் மற்றும் 11 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 19 பதக்கங்கள் கிடைத்துள்ளன. ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான சராசரி தரவரிசைப் பட்டியலில் இந்தியா 10வது பட்டியலில் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.