முழுவதும் மூழ்கிய வீட்டிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை..விமான படை வீரரின் மெய்சிலிர்க்கும் மீட்பு காட்சிகள் !
Home > தமிழ் newsமுழுவதும் மூழ்கிய வீட்டிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை..விமான படை வீரரின் மெய்சிலிர்க்கும் மீட்பு காட்சிகள் !
நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான மழை, வெள்ளத்தை கேரளா எதிர்கொண்டு வருகிறது. மழை, வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட 2 லட்சத்துக்கும் அதிகமானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 360-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அண்டைமாநிலங்கள் முதல் வெளிநாடுகள் வரை கேரளாவுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.
மாநிலம் முழுவதும் கடற்படை, விமானப் படை, ராணுவம், கடற்கரை பாதுகாப்பு குழு, தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர் என அனைவரும் ஒன்றிணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இடைவிடாது மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் இவர்களது சேவை மிகவும் இன்றியமையாதது.
இந்நிலையில் ஆலப்புழா பகுதியில் வீடு முழுவதும் மூழ்கிய நிலையில் வீட்டின் மொட்டைமாடியில் தாய் மற்றும் குழந்தை தவித்து கொண்டிருந்தார்கள்.அவர்களை விமான படையின் வீரர் பத்திரமாக ஹெலிகாப்டர் மூலம் மீட்டார்.மீட்ட குழந்தையை அவர் தாயிடம் ஒப்படைக்கும் காட்சிகள் அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.