சர்கார்:சர்ச்சை காட்சிகளை நீக்க வேண்டுமானால் படத்தையே நீக்க வேண்டும்!

Home > தமிழ் news
By |
சர்கார்:சர்ச்சை காட்சிகளை நீக்க வேண்டுமானால் படத்தையே நீக்க வேண்டும்!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி தற்போது வெளிவந்துள்ள சர்கார் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.  இந்த நிலையில் இப்படத்தில் நடித்தவரும், அரசியலாளருமான பழ.கருப்பையா சர்கார் படம் பற்றிய சில சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவது தொடர்பான கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசியுள்ளார்.


‘தணிக்கை குழு அனுமதித்து வெளிவந்த ஒரு படத்தை பார்த்துவிட்டு ஒவ்வொருவரும்  இதை நீக்கு அதை நீக்கு என்று சொன்னால், தணிக்கை குழுவுக்கு வேலையே இல்லை. இத்தனை பேரிடம் ஓட்டு எடுப்பு நடத்தியெல்லாம் ஒரு படத்தை வெளியிட முடியாது. இதற்கென்று இருக்கும் குழுவினரால் பல வசனங்கள் வெட்டப்பட்டும் அல்லது குரல் ஒலி சத்தம் பீப் செய்யப்பட்டும் வெளியிடப்படும்’ என்று கூறியுள்ளார்.


ஆக, இந்த குழுவினரால் அனுமதிக்கப்பட்ட வசனங்கள் இடம் பெறும் ஒரு படத்தில் எதையாவது நீக்க வேண்டுமானால் படத்தையேதான் நீக்க வேண்டும். இலவசங்கள், ஊழல் என நடப்பு அரசியலில் இல்லாததை படம் பேசவில்லை என்று பேசியுள்ளார்.  மேலும் இதுபற்றி கூறிய பழ.கருப்பையா, கலைஞரை மறைமுகமாகச் சுட்டிக் காட்டும் ஒரு வசனமும் இப்படத்தில் இருந்து நீக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

VIJAY, ARMURUGADOSS, SUNPICTURES, PALAKARUPPIAH