மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது உறுதியா?: மத்திய அரசு வழக்கறிஞர்!

Home > தமிழ் news
By |
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது உறுதியா?: மத்திய அரசு வழக்கறிஞர்!

மதுரை தோப்பூரில் தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மத்திய அரசு வழக்கறிஞர் உறுதி அளித்துள்ளார்.

 

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் அமைப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து டிச. 6-ல் நிலை அறிக்கை தாக்கல் செய்ய மத்திய சுகாதாரத்துறை செயலருக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

அதுமட்டுமல்லாமல், எய்ம்ஸ் கட்டுமான பணிகள் எப்போது தொடங்கும், எப்போது நிறைவடையும் என்பதையும் அறிக்கையில் குறிப்பிட உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது.

AIIMS, MADURAI, THOPPUR, HOSPITAL, TAMILNADU, TNHEALTH