#MeToo பாலியல் குற்றச்சாட்டுகள் மற்றும் சின்மயி ட்வீட்டுகள்..நடிகர் கமல் கருத்து!
Home > தமிழ் news#MeToo பாலியல் குற்றச்சாட்டுகள் மற்றும் சின்மயி ட்வீட்டுகள் குறித்து நடிகரும், மக்கள் நீதி மைய்யம் கட்சித்தலைவருமான கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ட்விட்டரில் #MeToo என்னும் ஹேஷ்டேக் மிகவும் பிரபலமாகியது. காரணம் பெண்கள் தங்களுக்கு நடந்த அநீதிகளை இந்த ஹேஷ்டேக்கில் வெளிப்படையாகத் தெரிவித்தனர். ஒரு கட்டத்தில் பிரபலங்களும் தங்களுக்கு நடைபெற்ற அநீதிகளை இதில் பதிவிட்டனர். இதனால் இந்த ஹேஷ்டேக் மிகவும் பிரபலமடைந்தது.
அந்த வகையில் கடந்த சில நாட்களாக கவிஞர் வைரமுத்து தங்களிடம் தவறாக நடந்து கொண்டார் என ஒருசில பெண்கள் இந்த #MeToo ஹேஷ்டேக்கில் ட்வீட் செய்தனர். இதனை பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதுதவிர சின்மயியும்,வைரமுத்துவுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை வெளியிட்டு இருந்தார்.பதிலுக்கு கவிஞர் வைரமுத்து உண்மையைக் காலம் உணர்த்தும் என பதிலளித்து இருந்தார்.
இந்தநிலையில் #MeToo பாலியல் குற்றச்சாட்டுகள் மற்றும் சின்மயி ட்வீட்டுகள் குறித்து நடிகர் கமல் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று காலை அவர் அளித்த பேட்டியில் கூறும்போது,'' குற்றம் சாட்டப்பட்டவர்கள் தான் கருத்து சொல்ல வேண்டும். அதற்கு நாம் எல்லாரும் கருத்து தெரிவித்தால் அது தவறாக இருக்கும்.அது நியாயமும் கிடையாது.
இந்த #MeToo விவகாரத்தில் அவர்கள் நியாயமான முறையில் தங்கள் குறைகளை சொல்வார்களாயின், அதில் கெடுதல் ஒன்றும் இல்லை.தீங்கு நிகழ்ந்துவிட்ட அந்த குற்றச்சாட்டை நாம் கண்ணகி காலத்தில் இருந்து சொல்லிக்கொண்டு தான் வருகிறோம்.சொல்லப்பட வேண்டும். அது நியாயமாக இருக்க வேண்டும்,'' என தெரிவித்துள்ளார்.
MeToo விவகாரத்தில் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்
— KamalHaasan - KamalismForever (@KamalismForever) October 12, 2018
- கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் #MeToo #KamalHaasan pic.twitter.com/dNkxqU6Atn