தமிழகம்: இனி PREKG குழந்தைகளின் பள்ளிநேரமும் மாலை வரை நீட்டிப்பு!
Home > தமிழ் newsஇளமையில் கல் என்பது போய் குழந்தையில் கல் என்று மாறியிருக்கும் காலம் இது. எல்.கே.ஜி, பிரீ.கே.ஜி உள்ளிட்ட வகுப்புகளில் பயிலும் குழந்தைகளுக்கு அறிவைக் காட்டிலும் திறன், மொழி, உடற்கல்வி, விழிப்புணர்வு, தோழமை, பழக்கவழக்கம், பண்பட்டு வளர்தல், வாழும் கலை ஆகியவற்றின் அடிப்படையை சொல்லிக்கொடுக்கும் மேம்பாட்டுக் கல்விகளே அவசியமானவை.
அவர்களை எந்திரங்கள் போல படி, எழுது, மனப்பாடம் செய் என்பன போன்ற கட்டுப்பாடுகளை விதித்து நடத்துவது அவர்களுக்கான கல்வி முறைமை அல்ல. எனினும் இந்த குழந்தைகளுக்கு தற்போது மதியம் ஒரு மணி வரை இந்த வகுப்புகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பிரீ கே.ஜி பள்ளிகளில் மாலை 4 முதல் 4.30 மணி வரை இந்த குழந்தைகளுக்கு பாடம் நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக வெளியான சுற்றறிக்கையின்படி தமிழகத்தில் உள்ள பிரீ கே.ஜி பள்ளிகளில் காலை 9.30 மணியில் இருந்து 4.30 மணி வரை பாடம் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. பலரும் இந்த முடிவுக்கு ஆட்சேபணை தெரிவித்தும் வருகின்றனர்.