தமிழிசை பாதிக்கப்பட்டதுபோல் எந்த கட்சி தலைவருக்கு நேர்ந்திருந்தாலும் நடவடிக்கை.. அமைச்சர்!

Home > தமிழ் news
By |
தமிழிசை பாதிக்கப்பட்டதுபோல் எந்த கட்சி தலைவருக்கு நேர்ந்திருந்தாலும் நடவடிக்கை.. அமைச்சர்!

பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், விமானத்தில் வரும்பொழுது பாஜகவை விமர்சித்த சோபியாவுக்கும் அவருக்கும் வாக்குவாதம் உண்டானது. அதன் பின்னர் விமான நிலைய காவக்ல் துறையினரால் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுதலை பெற்று வெளிவந்துள்ள சோபியாவின் பாஸ்போர்ட் நகலை அவரது தந்தை காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளார்.

 

பல்வேறு தலைவர்களும் தமிழிசை சவுந்தர்ராஜனின் செயலுக்கும், பலர் சோபியாவின் செயலுக்கும் கண்டனங்களை தெரிவித்த  நிலையில், சோபியா விவகாரம் போன்ற பிரச்சினை தமிழிசை மட்டுமல்ல, ஸ்டாலின், வைகோ, திருநாவுக்கரசர் உள்ளிட்ட எந்த அரசியல் கட்சி தலைவர்களுக்கு ஏற்பட்டாலும் அரசு நடவடிக்கை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

TAMILISAISOUNDARARAJAN, AIADMK, BJP, DMK, MKSTALIN, MINISTERJAYAKUMAR, ADMK, SOPHIA