அடுத்தடுத்து நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் தொடரும் வழிப்பறி, கொள்ளை : அச்சத்தில் பயணிகள்!

Home > தமிழ் news
By |
அடுத்தடுத்து நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் தொடரும் வழிப்பறி, கொள்ளை : அச்சத்தில் பயணிகள்!

சென்னையில் பொது இடங்களில் வழிப்பறி, கொள்ளை அராஜகங்கள் போய் தற்போது ரயில்வே நிலையங்கள் பேருந்து நிலையங்களில் இந்த குற்றங்கள் நிகழத் தொடங்கியுள்ளன.

 

அவ்வகையில் சென்னை நுங்கம்பாக்கம் மற்றும் கோடம்பாக்கம் ரயில் நிலையங்களில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பயணிகளிடம் கத்தியை காட்டி செல்போன்கள், பணம் முதலானவற்றை வழிப்பறி செய்துள்ளதாக ரயில்வே போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

இவ்வாறு அடுத்தடுத்து 2 ரயில் நிலையங்களில் நடந்துள்ளதால் இந்த வழிப்பறி சம்பவங்கள் குறித்து எழும்பூர் ரயில்வே போலீசார் விசாரணை  நடத்தி வருகின்றனர். முன்னதாக இதே நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில்தான் அனைவரையும் பதரவைத்த  ஸ்வாதி கொலைக்குற்றம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

CRIMESATNUNGAMBAKKAM, CHENNAI, RAILWAYSTATION, CRIMECASES