’ஒப்புதலின்றி 8 வழிச்சாலை அமைக்கக்கூடாது’.. மத்திய அரசு!
Home > தமிழ் newsசேலம் முதல் சென்னை வரையிலான எட்டு வழி பசுமைச் சாலை திட்டம் சில வாரங்களுக்கு முன்னர் மாநில அரசால் அறிவிக்கப்பட்டு, அதற்கான முயற்சிகள் நடந்தன. ஆனால் சேலம் மக்களும், சமூக ஆர்வலர்களும் இதனை எதிர்த்து வழக்குகளையும் போராட்டங்களையும் நிகழ்த்தினர்.
இது பற்றிய கேள்விகளுக்கு பதில் அளித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘ஒரு திட்டம் வருவதற்கு முன்னரே அதனைத் தடுக்க வேண்டும், இது வளர்ச்சியை நோக்கிய பயனுள்ள திட்டம்’ என்று பதிலளித்திருந்தார். அதன் பிறகு இத்திட்டத்தை கைவிடச் சொல்லி பலதரப்பில் இருந்தும் மனுக்கள் அளிக்கப்பட்டன.
இந்தநிலையில் இந்த வழக்குகளையும் மனுக்களையும் அடிப்படையாக வைத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விவாதம் இன்று நிகழ்ந்தது. விவாதத்தில் மத்திய அரசு தரப்பில் இருந்தும் வாதம் செய்யப்பட்டது. அதில், சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கும் வகையில் எந்த ஒரு திட்டத்தையும் அனுமதிக்க கூடாது என்றும் எட்டு வழிச் சாலை போன்ற திட்டங்களுக்கு முறையான ஆய்வுகளும் மத்திய அரசின் ஒப்புதலும் அவசியம் என மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது.