கனமழைக்கு கேரளா உட்பட 7 மாநிலங்களில் 774 பேர் பலி!
Home > தமிழ் newsசென்ற வருடங்களைப் போல் அல்லாமல், இம்முறை பருவமழை மோசமாக அடித்து வெளுத்து வாங்கிக்கொண்டிருக்கிறது. இடுக்கி, மேட்டூர் அணைகளில் நீர்வரத்தும் அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவும் அதிகமாகியிருக்கிறது.
கனமழை, பெருவெள்ளம் காரணமாக இந்தியா முழுவதும் வட மாநிலங்களிலும் தென் மாநிலங்களிலும் எத்தனையோ பேர் உயிரையும் உடமைகளையும் இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவற்றில் 7 மாநிலங்கள் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒட்டுமொத்த பேரிடர் கால கணக்கெடுப்பின்படி 774 பேர் கனமழை, வெள்ளம், இடர்ப்பாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பேரிடர் கண்காணிப்புக் குழு தகவல்களை வெளியிட்டுள்ளது.
இவற்றில் கேரளாவில் மட்டும் கனமழைக்கு அதிக அளவிலான உயிர்ச் சேதங்களும் பொருட் சேதங்களும் ஏற்பட்டுள்ளன. இதன்படி கேரளாவில் மட்டும் 187 பேர் உயிரிழந்துள்ளார். கேரளாவுக்கு அடுத்து உத்தரப்பிரதேசத்தில் 171 பேரும், மேற்கு வங்காளத்தில் 170 பேரும், மகாராஷ்டிராவில் 139 பேரும் பலியாகியுள்ளனர். இதனையடுத்து அந்தந்த மாநிலங்களுக்கு நிதியுதவிகளும், வெள்ள நிவாரணப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.