‘புல்வாமா தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை புகழ்ந்த மாணவிகள்’..வாட்ஸ் ஆப் பதிவால் பரபரப்பு!
Home > தமிழ் newsபுல்வாமா தாக்குதல் நடத்தியதற்கு ஆதரவாக காஷ்மீரை சேர்ந்த மாணவிகள் வாட்ஸ் ஆப்பில் கருத்து தெரிவித்ததாக கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புல்வாமா தாக்குதலால் 40 -கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவ வீரர்கள் எதிர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் காஷ்மீரை சேர்ந்த மாணவிகள் புல்வாமா தாக்குதலை புகழ்ந்து பேசியது எதிர்ப்புகளை கிளப்பியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள NIMS பல்கலைக்கழகத்தில், காஷ்மீரைச் சேர்ந்த மாணவிகளான தல்வீன் மன்சூர், இக்ரா, சோரா நஷிர், உஷ்மா நஷிர் ஆகியோர் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வந்தனர்.
இந்த மாணவிகள் புல்வாமா தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளை புகழ்ந்து, அவர்களுக்கு ஆதரவாக வாட்ஸ் ஆப்பில் கருத்துக்களை பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் காஷ்மீர் மாணவிகளான தல்வீன் மன்சூர், இக்ரா, சோரா நஷிர், உஷ்மா நஷிர் ஆகிய நான்கு பேர்களையும் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
புல்வாமா தாக்குதலால் நாடே சோகத்தில் இருக்கும் இது போன்ற சமயத்தில் காஷ்மீர் மாணவிகளின் இச்செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.