எதிரியாய் இருந்தாலும் 'நக்சல்' பெண்ணுக்கு ரத்தம் தந்து உயிர்கொடுத்த CRPF வீரர்கள்!

Home > தமிழ் news
By |

அண்மையில்  ஜார்க்கண்ட்டில்  நடந்த தாக்குதலின்போது எதிர்பாராதவிதமாக காயமடைந்த பெண் நக்சைலைட் ஒருவரின் உயிரினைக் காப்பாற்றும் விதமாக இந்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் செய்துள்ள உதவி நாட்டையே நெகிழவைத்துள்ளது.

எதிரியாய் இருந்தாலும் 'நக்சல்' பெண்ணுக்கு ரத்தம் தந்து உயிர்கொடுத்த CRPF வீரர்கள்!

ஜார்க்கண்ட் மாநிலத்தின் மேற்கு சிங்பம் வனப்பகுதியில் நக்சைலட்டுகள் ஊடுருவுவதாக தகவல் கிடைத்ததை அடுத்து, மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர், தங்களது படைகளுடனும், ஆயுதங்களுடனும் சென்று அந்த வனப்பகுதியைச் சுற்றி வளைத்தனர்.  ஆனால் சிஆர்பிஎப் போலீஸ் படைப்பிரிவினருக்கு முதல் நோக்கமாக பேச்சுவார்த்தையே இருந்துள்ளது. ஆகையால் அங்கிருந்தவர்களை சரணடையச் சொல்லி போலீஸார் கோரிக்கை விடுத்தனர்.

அப்போது அங்கிருந்த ஹண்டே ஹோன்காஹா என்கிற நக்சைலைட் அமைப்பின் தலைமையில் சுமார் 20க்கும் மேற்பட்டோர், போலீஸாரின் பேச்சுக்கு பணியாமல், சரணடையும் நோக்கமும் இல்லாமல், திடீரென ரிசர்வ் போலிஸ் படையினரை நோக்கி தாக்குதலில் ஈடுபட்டனர். இதற்கு ரிசர்வ் போலீஸ் படையினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். சிறிது நேர தாக்குதலில் தாக்குப் பிடிக்க முடியாமல் நக்சைலைட்டுகள் ஓடியுள்ளனர். உடனே அங்கு விரைந்த போலீஸார், தங்கள் தாக்குதலுக்குள்ளாகி ரத்த வெள்ளத்துடன் உயிருக்கு போராடிய பெண் நக்சைலைட் ஒருவரை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனாலும் அந்த பெண் நக்சைலைட்டுக்கு ரத்தம் தேவைப்பட்ட நிலையில், சிஆர்பிஎப் போலீஸ் படைப்பிரிவைச் சேர்ந்த 3 பேர் ரத்த தானம் வழங்கி அந்த பெண்ணுக்கு முதற்கட்ட மருத்துவ உதவியைச் செய்தனர். பின்னர் மேற்கொண்டு சிகிச்சை அளிப்பதற்காக அந்த பெண் அருகில் இருந்த சைபாசா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அண்மையில் நடந்த புல்வாமா தீவிரவாதத் தாக்குதலில் பலியான சிஆர்பிஎப் போலீஸ் படைப் பிரிவைச் சேர்ந்தவர்கள் இந்திய தேசத்துக்காக பலியாகி பலரையும் உருக்குலைய வைத்தனர். அதே நேரம் தங்கள் மீது தாக்குதல் செய்த நக்சைலைட் பெண் ஒருவருக்கு சிஆர்பிஎப் போலீஸார் ரத்தம் கொடுத்து உயிரைக் காப்பாற்றியுள்ள இந்த சம்பவமும் பலரையும் நெகிழவைத்துள்ளது. 

CRPFJAWANS, INDIA, JHARKHAND, NAXALITE WOMAN