2018-ம் ஆண்டு டாப் ட்விட்டர் ட்ரெண்டிங்ஸ்:அதிக லைக்ஸ், அதிக ரீட்வீட்...'விசில் போடு பிடித்த இடம்'!

Home > தமிழ் news
By |
2018-ம் ஆண்டு டாப் ட்விட்டர் ட்ரெண்டிங்ஸ்:அதிக லைக்ஸ், அதிக ரீட்வீட்...'விசில் போடு பிடித்த இடம்'!

2018-ம் ஆண்டு சமூக வலைத்தளங்கள்,அரசியல்,சினிமா மற்றும் பல சமூக பிரச்சனைகளில் முக்கிய பங்காற்றியது.அதிலும் ட்விட்டரின் பங்கு மிக முக்கியமானது.அரசியல் பிரபலங்கள் முதல் சினிமா நட்சத்திரங்கள் வரை ட்விட்டரில் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வந்தார்கள்.

 

தற்போது 2018-ம் ஆண்டிற்கு விடை கொடுக்கும் நேரம் வந்து விட்டது.இந்த வருடம் ட்விட்டரில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்திய தருணங்களை திரும்பி பார்க்கும் நேரமிது.இந்நிலையில் ட்விட்டர் ட்ரெண்ட்ஸ் டாப் 10 பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் இந்திய அளவில் முதல் பத்து இடங்களில் 7 இடங்களைப் பிடித்துள்ளது தென்னிந்திய சினிமா.

 

இதற்கு அடுத்தபடியாக அதிக தாக்கத்தை ஏற்படுத்திய தருணங்கள்  என்ற பட்டியலும் வெளியாகி உள்ளது. இதில் #MeToo மீடூ இந்தியா இயக்கம் ட்ரெண்டாகி உள்ளது.இந்தப் பட்டியலில் #KarnatakaElections, #KeralaFloods, #Aadhaar, #JusticeforAsifa, #DeepVeer, #IPL2018, #WhistlePodu  #AsianGames2018 ஆகிய ஹேஷ்டேகுகளும் இடம் பிடித்துள்ளன

 

இதே போல் அதிகப்படியாக ரீட்வீட் செய்யப்பட்ட ட்வீட் எது என்ற தகவலும் வெளியாகியுள்ளது. 2018 இன்டர்கான்டினென்டல் கோப்பை கால்பந்து போட்டியின்போது இந்திய கால்பந்து அணியின் ஸ்கிப்பர் சுனில் சேத்ரி வீடியோ மூலம் ரசிகர்களுக்கு அரங்கை நிரப்புமாறு வேண்டுகோள் விடுத்து பதிவிட்ட வீடியோ ட்வீட்டே அதிகம் ரீட்வீட் செய்யப்பட்டிருக்கிறது.

 

மேலும் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா கார்வாசவுத் என்ற பண்டிகையின் போது எடுத்துக் கொண்ட புகைப்படம் அதிக நெட்டிசன்களால்  லைக் செய்யப்பட்ட ட்வீட் ஆகும்.அதற்கு  சுமார் 2,15,000 பேர்  லைக் செய்துள்ளனர்.மேலும் ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட அரசியல் தலைவர்களின் டாப் 10 பட்டியலில் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார். அடுத்தபடியாக ராகுல் காந்தி, அமித் ஷா, யோகி ஆதித்யநாத், அர்விந்த் கேஜ்ரிவால் ஆகியோர் உள்ளனர்.