டேட்டிங் ஆப் மூலம் அறிமுகமான காதலனை நம்பிய காதலிக்கு கிடைத்த பாடம்!

Home > தமிழ் news
By |
டேட்டிங் ஆப் மூலம் அறிமுகமான காதலனை நம்பிய காதலிக்கு கிடைத்த பாடம்!

சமீபத்திய ட்ரெண்டிங்கில் வலம் வருகிறது ஆண்-பெண் நட்புறவை மிக எளிதாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட டிண்டர் ஆப். யார் வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் பிடித்திருந்தால் எளிதில் அவர்களின் சம்மதத்துடன் தொடர்பு கொண்டு நேரில் பழகும் வாய்ப்பினையும் இந்த ஆப் அளிக்கிறது. 

 

எனினும் இதன் மூலம் நிறைய குற்றங்களும் பெருகியுள்ளன. அப்படித்தான் இந்தோனேசியாவின் டிபாக் பகுதியில்,  இந்த ஆப் மூலம் அறிமுகமான 39 வயது காதலர் ஆந்திகா ப்ரேஸியா என்பவர், தான் காதலிக்கும் 41 வயது பெண்ணான வாக்ஸ் என்பவரின் காரை திருடிச் சென்றதற்காக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

 

ஆப்பில் அறிமுகமாகி அடுத்த லெவல் ரிலேஷன்ஷிப்பில் பயணித்துக்கொண்டிருந்த இவர்கள் இருவரும் கடந்த வாரம் மால் ஒன்றுக்கு சென்றுள்ளனர். அங்கு வாக்ஸ்  ஷாப்பிங் செய்துகொண்டிருந்தபோது, வாக்ஸின் காரை ஆந்திகா திருடி எடுத்துக்கொண்டு பறந்துள்ளார். அதிர்ச்சி அடைந்த வாக்ஸ் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் ஆந்திகாவை கண்டுபிடித்ததோடு, அவர் ஒரு தொடர் திருடர் என்பதையும், தற்போது டிண்டர் ஆப் மூலமாக நட்பாக பழகி திட்டமிட்டு இவ்வாறு திருடியுள்ளதாகவும் அறிந்துள்ளனர்.

 

மேலும் இவரது டார்கெட் 40 வயதுக்கு மேற்பட்ட தனியாக வாழும் பெண்கள்தானாம். அவர்கள் எதிர்பார்க்கும் நட்புறவை அளித்து அவர்களிடம் இருந்து உடமைகளை களவாடிச் செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார் என்பது விசாரணை மூலம் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து முன்பின் தெரியாதவர்களுடன் சமூக வலைதளங்கள் மூலமாக பழகும்போது எச்சரிக்கையுடன் இருக்க காவல் துறை அந்நாட்டு பெண்களை கேட்டுக்கொண்டுள்ளது.

TINDER, APP, MOBILE, TECHNOLOGY, THEFT, THIEF, BIZARRE, ROB, VIRAL, CRIME, POLICE