தடை விதிக்கப்பட்ட நேரத்தில் பட்டாசு வெடித்த 12 வயது சிறுவன் உயிரிழப்பு: தந்தை கைது!
Home > தமிழ் newsதீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதற்கான நேரத்தினை உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் தமிழக அரசு நிர்ணயித்திருந்தது. அந்த நேரத்தை தவிர்த்து பிற நேரங்களில் பட்டாசு வெடித்த ஆயிரக்கணக்கானோர் மீதும் தமிழ்நாடு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் 12 வயது சிறுவன் ஒருவன் பட்டாசு வெடிக்கும்போது உண்டான விபத்தினால் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நண்பர்களுடன் சேர்ந்து பட்டாசு வெடித்த சிறுவன் தினக்கூலியாளி ஒருவரின் மகனான இவர் விபத்துக்கு பின் மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்ட வழியில் உயிரிழந்தார். இவரது நண்பர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அரசு நிர்ணயித்த நேரத்தில் பட்டாசு வெடிக்காமல், பகல் 12 மணிக்கு பட்டாசு வெடிக்க அனுமதித்தால் சிறுவனின் தந்தையை கைது செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.